தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு !
தமிழகத்தில் ஒரு மாதமாக குறைந்து வந்த கொரோனா பதிப்பானது தற்போது அதிகரித்து வருகிறது அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இன்று 1,997பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 69ஆயிரத்து 398ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 20ஆயிரத்து 138ஆக குறைந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பதிப்பினால் 33பேர் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 230ஆக அதிகரித்துள்ளது.
இன்று 1,943பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 15 ஆயிரத்து 030ஆக அதிகரித்துள்ளது மேலும் 20 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.