மிரட்டும் கொரோனா .. கட்டுப்பாடுகளை அதிகரிக்கணும் : முதலமைச்சர் ஸ்டாலின் புதிய உத்தரவு

COVID-19 M K Stalin
By Irumporai Dec 22, 2022 07:30 AM GMT
Report

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் புதிய வகை கொரோனா : 

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் , இதனால் மீண்டும் முகக்கவசம் அணிவது , விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்வது மீண்டும் கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்காமல் தடுக்க உயர்நிலை குழுவுடன் ஆலோசனை நடத்துகின்றர் பிரதமர் மோடி இந்த நிலையில் கொரோனா தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமையகத்தில் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு :

இந்த அலோசனை கூட்டத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள், அமைச்சர் மா.சுப்பிரமணியன், ச தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் சீனா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பரிசோதனைநடத்தவும் , அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்தவும் , அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்காணிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.