தமிழக பாஜக துணைத்தலைவருக்கு கொரோனா - சோகத்தில் கட்சியினர்

corona tamilnadu bjp annamalai
By Jon Apr 11, 2021 01:30 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. கொரோனா பரவலை குறைக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைவிதித்துள்ளது. அதன்படி திருமண நிகழ்ச்சிகள் உட்பட சுபநிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. துக்கநிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டும் அனுமதி.

மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.  

தமிழக பாஜக துணைத்தலைவருக்கு கொரோனா - சோகத்தில் கட்சியினர் | Corona Tamilnadu Bjp Vice President Party Tragedy

இந்த நிலையில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு திரைப்பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் பதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக துணைத் தலைவரும், அவரக்குறிச்சி பாஜக வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணாமலை தனது ட்வீட்டர் பதிவில் தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் மருத்துவமனையில் இருப்பதகாவும், அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.