தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடா? - அரசின் அறிக்கையால் அதிர்ச்சி
இந்தியாவில் கொரோனா 2வது அலை அரசு வேகத்தில் பரவி வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 4 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், ஆக்ஸிஜன் நிரப்பும் ஆலைகள் 24 மணி நேரம் செயல்பட வேண்டும் என்றும் பிரமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, தமிழக அரசு இன்று ஊரடங்கு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பை போதுமான அளவு வைக்கும் நோக்கில் தமிழ்நாட்டிலேயே அதன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாண்புமிகு முதலமைச்சரால் தொழிற்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.