தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு..ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
கடந்த 24 மணி நேரத்தில் 15,659 பேருக்கு கரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 10,81,988ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 82 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,557 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவிலிருந்து இன்று மேலும் 11,065 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 9,63,251 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,180 ஆக உயர்ந்துள்ளது.