தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் 90% மக்களுக்கு எதிர்ப்பு சக்தி சிறப்பாக உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் 90% மக்களுக்கு எதிர்ப்பு சக்தி சிறப்பாக உள்ளது. முதலமைச்சரின் துரித நடவடிக்கை காரணமாக 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்கை வசதி அமைக்கப்பட்டது என்றார்.
அமைச்சர் விளக்கம்
இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசு மீண்டும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இதில், தமிழகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்ளிட்டோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.