கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் - தமிழக அரசு அறிவிப்பு!
covid19
corona
police
tamilnadu
By Irumporai
கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 13 காவலர்கள் குடும்ப வாரிசுகளுக்கு தலா 25 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என தமிழரசு தெரிவித்துள்ளது.
அதே சமயம் 36 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மீதமுள்ள 35 பேரின் முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் தலா 25 லட்சம் வழங்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.