இனி யாரையும் தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

By Nandhini May 02, 2022 05:38 AM GMT
Report

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் தடுப்பூசி முகாம் ஆரம்பிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

4 நாட்களுக்கு முன்பு 6 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தபட்டு வரும் நிலையில் , 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தால் 1.4 கோடி பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்க மறுக்கும் உத்தரவை மாநில அரசுகள் நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.   

இனி யாரையும் தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Corona Supreme Court