சென்னையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை

corona death sucide fear
By Praveen Apr 20, 2021 11:51 AM GMT
Report

சென்னையை அடுத்து கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தற்போது தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், தமிழகத்திலும் இந்த கொரோனா பாதிப்பின் தாக்கம் கட்டுக்கடங்காமல் நாளுக்குநாள் பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .

மேலும் தற்போது பல புதிய கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக, சென்னை அஸ்தினாபுரத்தை சேர்ந்த ஒருவர், கடந்த 16-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும், அந்த நபர் மூன்றாவது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அச்சத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.