கொரோனாவை விடக் கொடிய ஆட்சியாளர்கள்…!

corona gas oxygen
By mohanelango Apr 26, 2021 09:07 AM GMT
Report

 மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன..! ஆக்சிஜன் பற்றாகுறையாலும், ஆளுமை பற்றாகுறையாலும் கொத்து, கொத்தாக மரணங்கள்…! முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல், மக்களின் உயிர்பாதுகாப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு.., மக்களை பதுக்கவில்லை என்று எத்தர்கட்சிகள் குறை குறுகின்றனர்,

கொரோனாவை விடக் கொடிய ஆட்சியாளர்கள்…! | Corona Story

இந்த ஓராண்டு கால அவகாசத்தில் பேரிடர் கால நிர்வாகத்திற்கான அனுபவத்தையோ, அறிவையோ ஏன் பெறவில்லை என்று பலர் கேட்கிறார்கள்! பாரத் பயோடெக்கும், சீரம் நிறுவனமும் தயாரிப்பதை அரசுத்துறை நிறுவனங்களான ஐ.டி.பி.எல்லோ, ஹெச்.எல்.எல்.பயோடெக்கோ தயாரிக்க முடியாதா? 135 கோடி மக்களின் உயிர்கள் இரு தனியார் நிறுவனங்களை சார்ந்து மட்டுமே இருப்பது எவ்வளவு அவலம்! பெருந்தொற்று காலத்தை தனியார்கள் பணம் பார்த்துக் கொள்ளுவதற்கு வழிவகை செய்வதை என்னென்பது? சுமார் 60 ஆண்டுகால மருந்து தயாரிப்பு அனுபவங்கள் நமது பொதுதுறைக்கு உள்ளதே! இந்த காலகட்டத்தில் செயல் இழக்க வைக்கப்பட்டிருக்கும் அவற்றுக்கு உயிர்ப்பு தந்தால் பல ஆயிரம் கோடிப் பணம் மிச்சமாகும் என்பது மட்டுமல்ல, கேள்விக்கு அப்பாற்பட்ட நம்பகத்தன்மையும் ஏற்படும். கொரானா சிகிச்சைக்கு ஆக்சிஜன் அவசியம் என்பது அடிப்படை அறிவுள்ள பாமரனுக்கும் புரிந்த உண்மை!ஆனால்,அரசாங்கத்திற்கு புரியவில்லையே..என பலர் ஆதங்கப்படுகிறார்கள்.

கொரோனாவை விடக் கொடிய ஆட்சியாளர்கள்…! | Corona Story

பெருந்தொற்றோடு போராடும் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியிலும் ஈடுபடவில்லை. இருக்கிற ஆக்சிஜனை பாதுகாப்பாக ஸ்டோரேஜில் எடுத்து வைக்கவுவில்லை. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். யார் எங்களை கேட்க முடியும்..? என்ற அராஜக போக்கு! மக்களை எல்லா நேரங்களிலும், பதற்றத்திலும், துயரத்திலும், நெருக்கடிகளிலும் வைத்திருந்தால் தான் தங்கள் ஹிட்டன் அஜெண்டாக்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே செல்ல முடியும் என்று நினைக்கிறார்கள் ஆட்சியாளர்கள்!

எந்த ஒரு அரசாங்கமாயிருந்தாலும் திறமைசாலிகள்,அறிவாளிகள்,பொது நலன் விரும்பும் தன்னலமில்லா சான்றோர்கள் கொண்ட கூட்டுத் தலைமையால் வழி நடத்தப்பட்டால் மட்டுமே அது அனைத்து மக்களுக்கானதாக இருக்க முடியும்.


ஆக்சிஜன் உற்பத்தி ஒன்றும் கம்ப சூத்திரமல்ல, அந்தந்த மருத்துவமனைகளை ஒட்டியே சிறு பிளாண்ட் போட்டு புதிதாக உற்பத்தி செய்ய அதிகபட்சம் ஒரு வார காலகட்டம் போதுமானது. ஒரு வருட காலகட்டம் இருந்த போதிலும் அதை செயல்படுத்த விரும்பாதவர்களுக்கு இந்த நேரத்தில் வேதாந்தாவை தவிர வேறு யார் நினைவுக்கு வர முடியும். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காகத் தானே என்று பலர் கேள்வி ஏழுப்புகின்றனர் எந்த மருத்துவமனையும் அதன் தேவைக்கு ஏற்றபடி குறைந்த அளவில் ஆக்சிஜன் தயாரித்துக் கொடுக்கும் Pressure Swing Adsorption oxygen generator வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் இந்த ஆக்சிஜன் உற்பத்திக்கூடங்கள் உள்ளன. இப்படி ஒரு ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை அமைக்க சுமார் ஒன்றரை கோடி ரூபாய் தொடங்கி தேவைக்கு ஏற்ப கூடுதல் செலவாகும்! ஆக்சிஜனை ஓரிடத்தில் தயாரித்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் பல சிரமங்களும், இழப்புகளும் உள்ளன. போக்குவரத்து செலவுகளும் அதிகம், நேரவிரயமும் ஏற்படும். ஆக்சிஜன் காற்றுவெளியெங்கும் நிறைந்துள்ளது! ஆகவே, அதை தேவைப்படக்கூடிய அந்தந்த இடங்களிலேயே உற்பத்தி செய்வது தான் அறிவுடைமையாம் ,

எது எப்படியோ பெரும் தொற்று காலத்தில் மக்களை காப்பற்ற அரசும் ,அரசுக்கு மக்களும் ஒத்துழைத்து வெல்லவேண்டும் என்பதே பலரின் வேண்டுகளாக உள்ளது .....