தமிழகத்தில் மேலும் 5,415 பேருக்கு கொரோனா உறுதி

Covid status Tn health ministry
By Petchi Avudaiappan Jun 26, 2021 03:22 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் இன்று 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அதேபோல் தினமும் 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றும், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மேற்கு மண்டலத்தை சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்களுடன் காணொலியில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்