முதல்வரானதும் பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் எழுதிய முதல் கடிதம்
தமிழகத்திற்கு உடனடியாக தேவையான ஆக்சிஜனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில் தமிழ்நாட்டிற்கு உடனடியாக 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அடுத்த 2 வாரங்களில் 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழ்நாட்டிற்கு தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.