இந்தியாவில் ஆறு பேருக்கு புதிய உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனா தொற்றின் பரவல் தீவிரமாக இருந்து வரும் நிலையில் பிரிட்டனில் புதிய வகை கொரோனா தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது மிகவும் வேகமாக பரவுவதாகவும் பிரிட்டன் அரசு எச்சரித்திருந்தது.
இதனால் பல நாடுகளும் பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதித்தன. பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்தியாவில் தற்போது வரை ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கண்கானிப்புகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த ஆறு பேரையும் தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்கானித்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.