கனடாவில் கொரோனா மிகத் தீவிரமாக பரவி வருகிறது: பிரதமர் ஜஸ்டின் கவலை
கொரோனா பரவத் தொடங்கி ஒரு வருடன் ஆன பிறகும் உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிட்டாலும் கொரோனா பரவல் மற்றும் இறப்பு என்பது முன்பைவிட மிகத் தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் கொரோனாவின் மூன்றாம் அலை பரவுவதால் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
கனடாவில் தற்போது வரை 10 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளும் 23,000க்கு அதிகமான மரணங்களும் பதிவாகியுள்ளன. கொரோனா பரவலின் மூன்றாம் அலை கவலையளிக்கும் விதத்தில் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக கனடாவில் தினசரி 5,000க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இந்த மூன்றாம் அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் கனடாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.