உச்சத்தில் கொரோனா பரவல்.. மக்களை கடுமையாக எச்சரித்த மருத்துவ நிபுணர்கள்

covid medical people peak
By Jon Mar 23, 2021 04:47 PM GMT
Report

பெங்களூரில் கொரோனா பரவல் கடந்த 20 நாட்களில் 400 சதவீதம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்நிலையில் பெங்களுருவில் கடந்த 20 நாட்களில் 400% கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

210 ஆக்க இருந்த தினசரி வைரஸ் தொற்று இதே வேகத்தில் போனால் வரும் 26 ஆம் தேதி 6 ஆயிரம் வரை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றால் நிலைமை கை மீறி போய்விடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.