வேக்சின் போட்டவர்களையும் குறிவைக்கும் கொரோனா - அடுத்த அலையா? WHO எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா
கேரளாவில் பெண் ஒருவருக்கு ஜேஎன் 1 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதுகொரோனா ஒமிக்ரானின் துணை பிரிவான BA.2.86இன் புதிய மாறுபாடு ஆகும். பொதுவாக அனைத்து கொரோனா வகைகளின் அறிகுறிகளும் ஒரே போலத் தான் இருக்கும்.
காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், தலைவலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இந்த வேரியண்ட் நமது வேக்சின்களில் இருந்து தப்பிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதும் இதைப் பிரச்சினைக்குரிய ஒன்றாக மாற்றுவதாக அறியப்படுகிறது.
WHO எச்சரிக்கை
இந்த ஜேஎன் 1 வகை கொரோனா பாதிப்பு சீனாவிலும் பரவியுள்ளது. அதன்பின், 11 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வகை கொரோனாவால் ஆபத்து இல்லை என்றாலும் இதை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் இந்தியாவில் மட்டும் 335 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் டாக்டர் மரியா வான் கெர்கோவின் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா மட்டுமின்றி இன்புளுயன்சா, பாக்டீரியா பாதிப்பும் இந்த சீசனில் அதிகரிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மாஸ்க் அணிவது, மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்ப்பது, கைகளைக் கழுவுவது போன்றவற்றை எப்போதும்போல பின்பற்ற வேண்டியது அவசியம்.