அதிகரிக்கும் கொரோனா பரவல்: மலேசியாவில் ஊரடங்கு நீட்டிப்பு!
மலேசியாவில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஊரடங்கை நீட்டிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மலேசியா அரசு வெளியிட்ட அறிக்கையில், மலேசியாவில் வருகின்ற திங்களுடன் ஊரடங்கு முடியும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்று 4,000க்கும் கீழே குறையும்வரை ஊரடங்கு நீடிக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் இதுவரை 5 லட்சதுக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதுவரை 5% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.