தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா :இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்

COVID-19 Edappadi K. Palaniswami
By Irumporai Apr 11, 2023 07:08 AM GMT
Report

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

அதிகரிக்கும் கொரோனா 

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் , இதனை கட்டுப்படுத்த உலகநாடுகள் பலவும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டன. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது , தற்போது அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா :இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் | Corona Spread Eps Attention Resolution Eps

இவ்வாறான சூழ்நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார் அதன் படி தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும். 

இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்

 முகக்கவசம் அணிவதில் அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கொரோனா பரவலை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளார்.