நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி

பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரைப்படம் உள்பட இந்தியா சினிமா பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் சோனு சூட். இவர் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

பல மக்களுக்கு தனது சொத்துக்களை அடமானம் வைத்து பல்வேறு உதவிகளையும். பல மாணவர்களின் படிப்பு செலவுகளையும் தான் எடுத்துக்கொண்டு மக்களுக்காக பல சேவைகளை செய்து வந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சோனு சூட் .

இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது,அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்ததாவது, " கொரோனா தொற்று உறுதி. மன நிலை அதை விட உறுதியாக இருக்கிறது. அனைவருக்கும் வணக்கம், இன்று காலை எனக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் ஏற்கனவே என்னைத் தனிமைபடுத்திக் கொண்டு விட்டேன். அதிக அக்கறையோடு இருக்கிறேன். ஆனால் கவலை வேண்டாம்.

உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இது எனக்கு அதிக நேரத்தைத் தந்திருக்கிறது. உங்களுக்காக நான் என்றும் இருப்பேன் என்பதை மறக்காதீர்கள்" என பதிவிட்டுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்