கொரோனா தாக்கத்தால் அடுத்து இரண்டு வாரம் மிகவும் சவாலாக இருக்கும் - ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதை தொடர்ந்து வருகிற அடுத்து இரண்டு வாரங்களும் மிகவும் சவாலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அடுத்த இரண்டு வாரங்கள் சவாலானவை என்றும், போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தைக் கொடியசைத்து தொடக்கி வைத்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஊரடங்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், கட்டுப்பாடுகள் கைகொடுக்கா விட்டால், ஊரடங்கை விதிக்கும் முடிவை அரசு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.