உலக அளவில் புதிய கொரோனா பாதிப்பு இந்தியாவில் 46 சதவீதம் பதிவாகியுள்ளது - உலக சுகாதார மையம் தகவல்

india corona secondwave register highly
By Praveen May 05, 2021 12:35 PM GMT
Report

உலக அளவில் புதிய கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் மட்டும் பதிவாகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பல நாடுகளில், உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். ஒரு பக்கம் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் மற்றும் படுக்கை தட்டுப்பாடுகள் காரண்மாகவும் பல நோயாளிகள் உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், உலக அளவில் புதிய கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் மட்டும் பதிவாகிறது என்றும், இந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் 20% தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.