தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு கொரோனாவின் தாக்கம் கொடூரமாக இருக்கும் - மருத்துவர் பிரப்தீப் கவுர்
தமிழகத்தில் கொரோனவன் தாக்கம் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் மாட்டுக்கும் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்து 2 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும் என்று ஐசிஎம்ஆர் தமிழக பிரிவு துணை இயக்குநர் மருத்துவர் பிரப்தீப் கவுர் டிவிட்டரில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தற்போது கடினமான கட்டத்திற்குள் செல்ல தொடங்கியுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு கொரோனாவில் இருந்து உங்களையும், உங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தையும் காப்பாற்றுவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டும்.
மோசமான முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியின்மை ஆகியவற்றைக் கண்டு நான் ஏமாற்றமடைகிறேன் என்று ஐசிஎம்ஆர் தமிழக பிரிவு துணை இயக்குநர் டாக்டர் பிரப்தீப் கவுர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.