கொரோனா 2வது அலை ஓய்ந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது - எச்சரிக்கை
Covid second wave
Tn people
By Petchi Avudaiappan
கொரோனா நோயாளிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ஊரடங்கில் இருந்து தளர்வுகள் வழங்கப்பட்டாலும் கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.
மேலும் கொரோனா உயிரிழப்புகளை தமிழக அரசு மறைக்கவில்லை. மறைப்பதற்கான அவசியமும் இல்லை என்று கூறிய ராதாகிருஷ்ணன் டெல்டா பிளஸ் மட்டுமின்றி அனைத்து வகையான தொற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.