தமிழகத்தில் பள்ளிகளில் மீண்டும் அதிகரித்த கொரோனா : வெளியான அதிர்ச்சி தகவல் .. பள்ளிகள் மூடப்படுமா?

By Irumporai Sep 03, 2021 08:18 AM GMT
Report

அரியலூரில் உள்ள தனியார் பள்ளிகளில் 2 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இந்த நிலையில் கடந்த 1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு நடத்தவேண்டும், 20 மாணவர்களை மட்டுமே ஒரு வகுப்புக்கு அனுமதிக்க வேண்டும், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் உடன் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்த  நிலையில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாணவி தனிமைப் படுத்தப்பட்டு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அரியலூரில் இருவேறு பள்ளிகளை சேர்ந்த 2 மாணவிகளுக்கு கொரொனோ தோற்று உறுதியாகியுள்ளது. அரியலூரில் உள்ள தனியார் பள்ளிகளை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இதே போல் கடலூர்; நெய்வேலியில் தனியார் பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று நாட்களே ஆன நிலையில் பள்ளிகளில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.