229 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா.. இரண்டாம் அலையை சந்திக்கிறதா இந்தியா?
மஹாராஷ்டிராவில் உள்ள வாசிம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கியிருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. விதர்பா மாவட்டத்தை சேர்ந்த 327 மாணவர்கள் அந்த பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தனர். அவர்களுக்கு நடந்த பரிசோதனையில், 229 மாணவர்கள் மற்றும் 4 பள்ளி ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானது.
இதனையடுத்து அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 14ம் தேதி தான் மாணவர்கள் விடுதிக்கு திரும்பியதாக, அப்பகுதி தாசில்தார் தெரிவித்து உள்ளார். கடந்த வாரம், லடூர் மாவட்டத்தை சேர்ந்த 39 மாணவர்கள் மற்றும் 5 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில், கொரோனாவினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று மட்டும் அங்கு, 8,807 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21, 21,119 ஆக அதிகரித்து உள்ளது. 51, 937 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் பதிவாகும் பாதிப்புகளில் 75% கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் பதிவாகி வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதக்கப்படுகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் கட்ட பரவல் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.