கொரோனா விதிமுறை மீறல்..26 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
corona
rules
action
break
By Praveen
திருச்சியில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாத, 26 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த, ஏப்ரல், 20ம் தேதியில் இருந்து, இரவு, 10:00 மணி முதல் அதிகாலை, 4:00 மணி வரை, இரவு நேர பொது முடக்கம் அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகர பகுதியில், விதிமுறைகளை பின்பற்றாத, 26 வணிக நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.