கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்து வருகிறது : உலக சுகாதார அமைப்பு

COVID-19 COVID-19 Vaccine
By Irumporai Sep 15, 2022 02:43 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உலக அளவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி பெரும் பரபரப்பை ஏறப்டுத்திய நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு  குறைந்து வருகிறது : உலக சுகாதார அமைப்பு | Corona Risk Is Decreasing Who

உயிரிழப்போர் எண்ணிக்கை குறைவு 

அதே சமயம் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு  குறைந்து வருகிறது : உலக சுகாதார அமைப்பு | Corona Risk Is Decreasing Who

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில்: கொரோனாவால் ஏற்பட்ட அச்சுறுத்தல் முடிவுக்கு வருவதுபோல் உள்ளது. கொரோனாவால் உயிரிப்போர் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் குறைந்துள்ளது.

கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் முடிவிற்கு வருவதற்கான அறிகுறி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.