மீண்டும் வூஹானில் அதிகரிக்கும் கொரோனா .. அச்சத்தில் மக்கள்!

china deltacorona
By Irumporai Aug 03, 2021 11:09 AM GMT
Irumporai

Irumporai

in சீனா
Report

சீனாவின் வூஹான் மாகாணத்தில் மீண்டும்  கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் உற்பத்தியானதாக கூறப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

கடந்த சில மாதமாக உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் சீனாவில் கொரோனா பரவல் மிக குறைவாகவே இருந்தது , இந்த நிலையில்தற்போது மீண்டும் சீனாவின் வூஹான் மாகாணத்தில்  கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.

சீனாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு  இதுவரை 12க்கும் மேற்பட்ட நகரங்களில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது ஆகவே டெல்டா வகை கொரோனா பாதிக்கப்பட்ட 61 பேர் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் பரிசோதனை மேற்கொள்வதை சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

தொற்று பரவல் அதிகம் உள்ள யாங்சோ பகுதியில் வசிக்கும் மக்கள் நாளொன்றுக்கு குடும்பத்திற்கு ஒருவர் மட்டும் வெளியில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர் மீண்டும் வூஹானில் டெல்டா கொரோனா அதிகரித்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.