கொரோனா இறப்புகள் மறைப்பா? - வெளியானது அதிர்ச்சி தகவல்!

india corona covidDeath
By Irumporai Jun 10, 2021 01:57 PM GMT
Report

இந்தியாவில் ஒரே நாளில்  இன்று மட்டும் அதிகபட்சமாக 6,148 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகின.

கடந்த சில நாட்களாக இறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில் இன்றும் மட்டும் திடிரென்று பலி எண்ணிக்கை உயர்ந்தது பலருக்கும் அதிர்ச்சியினையும் சந்தேகத்தையும் கிளப்பியது.

இறப்பு விகிதம் உயர காரணம் என்ன?

இந்தியாவில் இன்று அதிகபட்சமாக கொரோனா தொற்றால் பலியானவர்கள் 6,148 என்ற எண்ணிக்கை வெளியானது.

இதற்கான காரணாம் பீகார் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை மறுதணிக்கை செய்யப்பட்டதே காரணமாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பீகார் அரசு கொரோனா பாதிப்பு நிலவரங்களை குறைத்துக் காட்டுவதாக புகார் எழுந்தது.

இது குறித்து பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாத உயிரிழப்புகளை தணிக்கை செய்ய உத்தரவிட்டது.

மறு தணிக்கை செய்ததில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா தொற்றிற்கு 1,600 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.

முன்னதாக பீகார் அரசு 5,500 பேர் உயிரிழந்ததாக கூறியிருந்தது தற்போது தணிக்கைக்குப் பிறகு அனைத்து மாவட்டங்களிலும் 72 சதவீதம் அதிகமான உயிரிழப்புகள் இருப்பதாக தணிக்கை ஆய்வில் உள்ளது

ஆகவே கொரோனா  இறப்புகளை பீகார் அரசு மறைத்ததால், தற்போது தனது இறப்பு புள்ளி விவரங்களை அதிகரித்து காட்டியதாக சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.