மே மாதத்தில் கொரோனா பதிப்பு 48 லட்சமாக உயரும் ... அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐஐடி!

covid19 india corona
By Irumporai Apr 27, 2021 07:10 AM GMT
Report

இந்தியாவில், மே மாத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிகை 48 லட்சம் வரை அதிகரிக்கலாம் என்று திடுக்கிடும் தகவலை கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மே 14 -18 தேதிகளுக்கு இடையிலான கால கட்டத்தில் கொரோனா தொற்றால் பதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 38 லட்சம் முதல் 48 லட்சமாக இருக்கும் என்றும் ஐஐடி கணித்துள்ளது.

மேலும் தினசரி பாதிப்பானது 4.4. லட்சமாக இருக்கும் என்றும் ஐஐடி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கான்பூர் ஐஐடியின் அறிவியல், பொறியியல் பிரிவு தலைவர் மணீந்தர் அகர்வால் கூறுகையில்:

நாங்கள் கணித்துள்ள அளவுக்குள்தான் நிச்சயம் பாதிப்புகள் இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

மே 15ம் தேதி 2வது அலை இந்தியாவில் உச்சத்தைத் தொடும் என்று ஏற்கனவே நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன் பின்னர் நோய் பாதிப்பு படிப்படியாக குறையும் என்று கூறப்படுகிறது.