ஊரடங்கு தளர்வால் சந்தையில் குவிந்த மக்கள் - காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்
திருப்பூரில் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டில் முகக்கவசம் அணியாததன் மூலம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கொரோனா அதிக அளவு பரவ வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் அச்சம்.
திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் காய்கறி, மீன்கள் வாங்க பெருந்திரளாகக் கூடினர்.
மேலும் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதி தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் அதனை தடுக்கும் விதமாக அரசு ஊரடங்கு விதிகளை அமல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொருட்படுத்தாமல் காய்கறி மற்றும் மீன் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர்.
சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகக் கவசம் இன்றியும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருப்பதால் வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது.
மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது காவல்துறையினர் வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.