இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : டெல்லி அரசு இன்று முக்கிய ஆலோசனை

Corona DelhiGoverment Covid19India
By Irumporai Apr 20, 2022 03:22 AM GMT
Report

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்றே குறைந்து வந்தது.

ஆகவே , கொரோனா கடுப்பாடுகளை முழுவதும் வாபஸ் பெறுவதாக அறிவித்தது மத்திய அரசு, அதே போல் பொதுமக்கள் முகக்ககவசம் அணிய வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியது.

இந்த நிலையில்,கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் இந்தியாவின் சில பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில்,டெல்லி,கேரளா,ஹரியானா மகாராஷ்டிரா,மிசோரம் உள்ளிட்ட மானிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : டெல்லி அரசு இன்று முக்கிய ஆலோசனை | Corona Restrictions In Delhi Government Today

ஆகவே ,இந்த ஐந்து மாநிலங்களில் கொரோனா பரவலை கண்காணிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்,டெல்லியில் 1.42 விழுக்காடாக இருந்த கொரோனா பரவல் தற்போது 3.49 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு டெல்லி துணை ஆளுநர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசனை இன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில்,டெல்லியில் முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.