பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் : முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

COVID-19 M K Stalin
By Irumporai Jun 11, 2022 06:56 AM GMT
Report

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா

இந்த நிலையில்,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது மருத்துவத்துறை வல்லுநர்கள்,செயலாளர் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் .

பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் | Corona Restrictions Again Cm Stalin Adviser Today

மாஸ்க் முக்கியம்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து இந்த ஆலோசனை நடைபெற்றது இந்த கூட்டத்தில் அதிகாரிகளுடன் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் :

கொரோனா பதுகாப்பு முறைகளான முகக் கவசம் அணிதல் தனி மனித இடைவெளி ஆகியவற்றை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் .

கொரோனா தடுப்பூசி குறித்த முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் .

கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் கொரோனா தாக்கம் தற்போது குறைவாக இருந்தாலும் அது மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும் 

கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்

கொரோனா பரிசோதனை, தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட வேண்டும்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்