மக்களே கவனம்: தமிழகத்தில் எகிறும் கொரோனா தொற்று - மாஸ்க் கட்டாயம்!
தமிழகத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸானது பின்னர் உலகையே ஆட்டி படைத்தது. முகக் கவசம், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவற்றின் பாதிப்பு குறைந்தது.
தற்போது சிங்கப்பூர், சீனா என பல்வேறு நாடுகளில் கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில், ஜே.என்.1.1, எக்ஸ்.பி.பி., பி.ஏ.2 உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று பரவி வருகிறது.
12 பேர் பாதிப்பு
இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 256 பேருக்கு கொரோனா பாரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
இதில் சென்னையில் 8 பேருக்கும், கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தலா 2 பேர் என 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 184 ஆக உள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.