கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்தை விற்றதாக 16 பேர் கைது

By Praveen May 05, 2021 02:17 PM GMT
Report

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக சென்னையில் மட்டும் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பில் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் முகாம் அமைத்து, 800 ரூபாய் முதல் மூன்றாயிரம் ரூபாய் வரை இம்மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மருந்துக் கட்டுப்பாட்டு துறையினர் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள், தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் கள்ளச்சந்தையில் மருந்து விற்பனை செய்த 16 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே, 14 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.