நிவாரண நிதியை முதல்வரிடம் வழங்கிய உதயநிதிஸ்டாலின்..!
கொரோனா நிவாரண நிதிக்காக பொதுமக்கள், நிறுவனங்கள் சார்பாக வழங்கப்பட்ட நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் ஒப்படைத்தார். நாடு முழுவதும் கொரோனா பரவலால் அஞ்சி நடுங்கி வருகிறது. இந்த நிலையில், கொரோனாவை எதிர்த்து போராட முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி திரட்டி வருகிறார். அந்த வகையில் பொதுமக்கள், நிறுவனங்கள் என ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை நிதியாக அளித்து வருகின்றனர். அதன் படி, சில பொதுமக்கள், நிறுவனங்கள் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினிடம் நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். அந்த நிதிகளை எல்லாம் திரட்டி கையில் வரப்பட்ட 38 லட்சத்து 32 ஆயிரத்து 235 ரூபாயையும், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களிடம் பொதுமக்கள் அளித்த 13 லட்சத்து 73 ஆயிரத்து 314 ரூபாயும் சேர்த்து மொத்தம் 52 லட்சத்து 5 ஆயிரத்து 549 ரூபாயை கொரோனா நிவாரண பணிகளுக்கு, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.