கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதியை வழங்கிய கனிமொழி!
கொரோனா நிவாரண நிதிக்காக மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சார்பில் வழங்கப்பட்ட நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கனிமொழி எம்.பி. ஒப்படைத்தார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலால் அஞ்சி நடுங்கி வருகிறது. இந்த நிலையில், கொரோனாவை எதிர்த்து போராட முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி திரட்டி வருகிறார்.
அந்த வகையில் பொதுமக்கள், நிறுவனங்கள் என ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை நிதியாக அளித்து வருகின்றனர்.
அதன் படி, மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சார்பில் வழங்கப்பட்ட 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை நாடாளுமன்ற எம்.பி. கனிமொழி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒப்படைத்தார்.
இதில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.
மேலும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சார்பில் பேராயர் தேவசகாயம், முதலமைச்சரை நேரடியாக சந்தித்து கொரோனா நிவாரண பணிகளுக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.