கொரோனா நிவாரண நிதிக்கு பிச்சைக்காரர் 7 லட்சம் நிதியுதவி
துாத்துக்குடி அருகே பிச்சைக்காரர் ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்கு 7 லட்சம் நிதியுதவி அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ஆலக்கிணறு கிராமத்தை சேர்ந்த முதியவர் கூல் பாண்டி. இவர் அன்றாடம் யாசகம் பெற்றே வாழ்ந்து வருகிறார்.
கூல்பாண்டி கல்வி கற்கவில்லை என்றாலும் ,தான் யாசகம் பெற்ற பணத்தை தனக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வழங்கி , பலர் கல்வி கற்க உதவியுள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்குள் மட்டும், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 7 1/2 லட்சம் வரை அனுப்பியுள்ளார்.
கூல் பாண்டியின் உதவும் மனப்பான்மையை அறிந்த சுற்றுவட்டார மக்கள், அவர் யாசகம் பெற வந்தாலே தாராளமாக உதவி செய்து வருகிறார்கள்.
இதனால் தான் இவ்வளவு குறுகிய காலத்தில் 7 1/2 லட்சம் வரை முதலமைச்சரின் நிவாரண நிதி அனுப்பியிருக்கிறார்.
உதவிகளை செய்ய பணம் தேவையில்லை, மனம் இருந்தால் போதும், பணம் தானாக வந்து சேரும் என்பதை நிரூபிக்கும் வண்ணமாக கூல் பாண்டியின் இந்த செயல் அமைந்துள்ளது.