கொரோனா நிவாரண தொகை வரும் 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்: தமிழக அரசு!

corona tamilnadu reliefammount
By Irumporai Jul 25, 2021 03:44 PM GMT
Report

கொரோனா நிவாரண தொகையான 4000 ரூபாயை இதுவரை பெறாதவர்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள தமிழ்நாடு அரசு அறுவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும், கொரோனா நிதியாக ரூ 4000 வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தியது

. அந்த வகையில் 99 சதவிகிதத்திற்கும் மேலாக குடும்ப அட்டைதாரர்கள் நிவாரணத் தொகை மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மே பத்தாம் தேதி முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் மனுதாரர்களுக்கு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள தமிழக அரசு.

புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து இன்றியமையா பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.