விருத்தாசலத்தில் கைதிகள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா!

covid19 tamilnadu
By Irumporai May 17, 2021 04:58 AM GMT
Report

 தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.

 தற்போது கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த 4 பேருக்கும் அதே வளாகத்தில் கிளை சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது.

விருத்தாசலத்தில் கைதிகள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா! | Corona Prisoners At Vriddhachalam

இதில் சிறைக்கைதி 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும்  சிறைக்கைதிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.