புதிய உச்சத்தில் கொரோனா: பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் அவசர ஆலோசனை
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இந்தியாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் வருகிற 8-ம் தேதி அவசர ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழகம், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஏற்கனவே கலந்தாலோசித்திருந்தார்.
தற்போது பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலமாக முதல்வர்களுடன் கலந்துரையாட உள்ளார். இந்த கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்தும் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.