ஜப்பான் சென்ற உகாண்டா அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா - ஒலிம்பிக் போட்டி நடக்குமா?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் சென்ற உகாண்டா அணி பயிற்சியாளரை தொடர்ந்து மற்றொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
32-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.
கொரோனா காரணமாக மது அருந்த தடை, வீரர், வீராங்கனைகளிடம் ஆட்டோகிராப் பெற அனுமதி மறுப்பு, உற்சாகமூட்டும் வகையில் உரக்க கத்தக்கூடாது, கட்டித் தழுவ கூடாது, கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டும், போட்டி முடிந்ததும் வெளியே சுற்றாமல் நேராக வீடுகளுக்கு செல்லவேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஜப்பான் சென்றடைந்த 9 பேர் கொண்ட உகாண்டா அணியில் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
இதனிடையே உகாண்டா அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நபரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை