தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு - அதிர்ச்சி தகவல்

Covid 19 positive Tn government Tn health ministry
By Petchi Avudaiappan Jul 30, 2021 04:00 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 தமிழகத்தில் ஒரேநாளில் 1,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,57,611 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,050 ஆக உள்ளது. மேலும் 2,193 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,02,627 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 230 பேருக்கும், சென்னையில் 215 பேருக்கும், ஈரோட்டில் 171 பேருக்கும், சேலத்தில் 84 பேருக்கும், தஞ்சாவூரில் 105 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.