வீடு திரும்பினார் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன்!
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனாவின் பிடியில் மக்கள் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் அதன் வீரியம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினசரி பாதிப்பு இன்று இரண்டு லட்சத்தைத் தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. உயிரிழப்பு எண்ணிக்கை 1000த்தையும் தாண்டி கடந்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனாவின் 2ம் அலையில் அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் உள்ளிட்ட பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில தொற்றின் தீவிரத்தால் உயிரையும் இழந்துள்ளனர். இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 8ம் தேதி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. உடனே அவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தொற்றின் தீவிரம் குறைந்ததால் நேற்று அவருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று வந்ததால் மருத்துவமனையிலிருந்து தற்போது வீடு திரும்பியுள்ளார் கேரளா முதல்வர் பினராயி விஜயன்.