ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் 40 பேருக்கு கொரோனா: சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு
இந்தியாவில் திரும்பவும் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. பல மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் தொடர்ந்து கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கின்றன.
இந்நிலையில், சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தத கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு பணிபுரிந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனையடுத்து சக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.