சென்னையில் ஒரே குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா: அதிகரிக்கும் பதற்றம்
சென்னையில் மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை படு தீவிரமாக பரவி வருகிறது, இதனால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும், மக்கள் மிக கவனமுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாளை முதல் திருவிழாக்கள், மதக்கூட்டங்களுக்கு தடை உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 7 வீடுகளில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.