தமிழகத்தில் மேலும் 34,875 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 34,875 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 16,99,225 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
?தமிழகத்தில் மேலும் 34875 பேருக்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி; 365 பேர் உயிரிழப்பு?
— கதிர் கோ ??? ?? ?? (@RaviraajAqua) May 19, 2021
23863 பேர் மீண்டனர்!#TNCoronaUpdates pic.twitter.com/IF4lPTa23L
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 365 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 18,734 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 23,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 14,26,915 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.