இந்தியாவில் ஏப்ரல் இறுதியில் உச்சத்தை தொடுகிறது கொரோனா - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

covid19 india peak scientist
By Jon Apr 03, 2021 01:34 PM GMT
Report

இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மார்ச் தொடக்கத்தில் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. நேற்றுஒரு நாள் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது, இறப்பும் 700 ஐ கடந்துள்ளது.

கொரோனா கட்டுக்குள் அடங்காமல் பரவி வருகிற நிலையில் விரைவில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த மணீந்தர் அகர்வால் என்ற விஞ்ஞானி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாட்டில், தினசரி கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை இன்னும் இரு வாரங்களில் அதாவது ஏப்ரல் 15-ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதிக்குள் உச்சத்தை தொடும்.

அதன் பின்னர் படிப்படியாக குறைந்து மே மாத இறுதியில் குறையும் என்றும் கூறியுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வுப் பிரிவு மேற்கொண்ட கணிப்பும் இதே போன்ற முடிவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர கவுதம் மேனன் என்ற அசோகா பல்கலைக்கழக விஞ்ஞானியும் ஏப்ரல் மத்தியிலிருந்து மே மத்திக்குள் தினசரி இறப்புகள் உச்சத்தை தொடும் எனக் கூறியுள்ளார். மேலும், கொரோனா முதல் அலையின்போது வெளியான ஆய்வுகள் சரியாக கணித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.