கொரோனா உச்சம் - மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யுங்கள் : பிரியங்கா காந்தி!

covid19 student priyanka exam gandhi
By Jon Apr 09, 2021 10:27 AM GMT
Report

இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அதிகமாக பரவி வரும் இந்த நிலையில், சிபிஎஸ்இ இயக்குநரகம் மாணவர்களுக்கு 10, 12 வகுப்பு பொது தேர்வுகள் நடைத்துவது பொறுப்பற்ற செயல் என்றும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே 4 முதல் ஜூன் 7-ம் தேதிவரை பொது தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இதற்காக நாடு முழுவதும் தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவி வருவதால் சிபிஎஸ்இ படிக்கும் மாணவர்கள் வீட்டிலிருந்தே படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பொது தேர்வு எதிர்கொள்ளும் அளவுக்கு மாணவர்கள் தயாராகவில்லை. இதனால் அவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் ஒரு லட்சம் சிபிஎஸ்இ மாணவர்கள் பொது தேர்வை ரத்து செய்ய கோரி “cancelboardexams2021” என்ற ஹாஷ்டேக் ட்விட்டர் வலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

 

இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா உச்சத்தில் இருக்கும் போது சிபிஎஸ்இ இயக்குநரகம் பொது தேர்வு எழுத அனுமதித்திருப்பது பொறுப்பற்ற செயல் என விமர்சனம் செய்துள்ளார். மேலும் சிபிஎஸ்இ மாணவர்கள் பொதுத் தேர்வுகளை நேரில் எழுத கட்டாயப்படுத்தக் கூடாது.

தேர்வுகளை ரத்து செய்யலாம் அல்லது ஆன்லைன் மூலம் தேர்வுகளை எழுதுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நாட்டில் தேர்வு முறையை முழுமையாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், உணர்வுப் பூர்வமாக மாணவர்களை அணுக அரசு முன்வர வேண்டும் என பதிவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர், பிரதமர் மோடி பொது தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் தைரியமாக தேர்வுகளை எழுதவேண்டும் என்று மாணவர்களிடம் நிகழ்ச்சி ஒன்றில் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.