வாக்களிக்க விருப்பம் காட்டாத கொரோனா நோயாளிகள்
சென்னையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் அதிகபடியான மக்கள் வாக்கு செலுத்த விருப்பம் காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் 60% பேர் மருத்துவமனைகளிலும், சிலர் கொரோனா சிகிச்சை மையம் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர்.
மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் மாலை 7 மணியளவில் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி சாதாரண மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்திய பிறகு, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய கவசம் அணிந்து வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தவும் அறிவுறுத்தபட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் தற்போது வரை 8,991 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகைச்சைபெற்று வருகின்றனர். இதிலிருந்து தற்போது சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வெறும் 17 பேரு தான் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது ஓட்டு சதவீதத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.